தணிகை முருகனின் தரிசனம் பெற்ற கணமே அவர் உள்ளுணர்வு தூண்டபெற்று
" சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமஅருட்
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமுமென் கண்ணுற்றதே !"
என அந்த காட்சியை அனுபவித்து பாடுகின்றார். (இந்த அறை சென்னை ஏழு கிணறு பகுதியில், பழைய எண் 38, வீராசாமி பிள்ளைத் தெரு, இல்லத்தில் இப்போதும் இருக்கிறது.) இதே உள்ளுணர்வுதான் இராமலிங்கரின் மனதில் வளர்க்க வேண்டியவற்றை வளர்த்து, தள்ள வேண்டியவற்றை தள்ளி தக்க வழிகாட்டியாக இருந்திருக்கிறது. உள்ளுணர்வு தூண்டப்பெற்றதால் தனித்திருந்து படிக்கும் உணர்வை பெற்றார். திருவாசகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். நிறைய நூல்களை இவ்விதமே கற்றறிந்தார். இதனை

"குமாரபருவத்தில் என்னை கல்வியிற் பயிற்றும்
ஆசிரியரையின்றியே என்றரத்திற் பயின்றறிதற்கருமை
யாகிய கல்விப் பயிற்சியை எனதுள்ளகத்தேயிருந்து
பயிற்றுவித்தருளினீர்"
என்று சத்திய பெருவிண்ணப்பத்தில் குறிப்பிடுகின்றார். வேதம், மருத்துவம், ஜோதிடம் போன்ற கலைகள் பற்றிய அறிவை உள்ளுணர்வு உணர்த்தியது பற்றி "திருஅருட்பா" வில் பல இடங்களில் குறிப்பிடுகின்றார்.