Saturday, 30 April 2016

Vallalar Varalaru Contd...(Thala Yatra)இராமலிங்கர் திருமணத்திற்கு பின் எப்போதும் போல் சொற்பொழிவு, தல யாத்திரை, மேற்கொண்டார்.  திருமுல்லைவாயில் சென்று மாசிலா
மணீச்வரரை வணங்கினார்.  தாம் சிறுவயதில் சென்று வழிபட்ட கந்தகோட்டத்தை, திரும்பவும் சென்று வழிபட்டார்.  அதன் நலிந்த நிலையை கண்டு மிகவும் மனம் வருந்தி அது மீண்டும் பொலிவு பெற இறைவனை வேண்டி  "திருஓங்கு புண்ய செயல் ஓங்கி அன்பருள் திறலோங்கு செல்வம் ஒங்க " எனத் தொடங்கி பாடினார்.  அவரது பாடல் வரிகளுக்கேற்ப கந்தகோட்டம் புனரமைக்க பெற்று சீர்பெற்று, செல்வம் ஓங்கி, விளங்கியது.

பின்னர், சென்னை  பாடியில் உள்ள திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிவஸ்தலம், திருவலிதாயம் என்று வழங்கப்பட்ட அந்த இடத்திற்கு சென்றிருந்தார் நமது வள்ளலார்.  அங்கு இறைவன் எண்ணெய் கறை ஏறிய ஒரு கந்தலாடையை அணிந்திருப்பதை பார்த்தார்.  மனம் கரைந்து உருகினார்.

"சிந்தை நின்ற சிவானந்தச் செல்வமே 
 எந்தையே எமைஆட் கொண்ட தெய்வமே 
 தந்தையே வலிதாயத் தலைவா நீ 
 கந்தை சுற்றும் கணக்கது என்கொலோ ?"

 -----எனக் கசிந்து உள்ளம் உருகினார்.

அவரின் மனம் வருத்தம் உணர்ந்த அன்பர்கள் உடனடியாக கோயிலை செப்பனிட்டனர்.   நித்ய பூஜைகள் நடைபெற்றது.  இறைவனின் கந்தலாடைக் கோலம் மாறி புதுப் பொலிவுடன் திகழ்ந்தது.

ஒருமுறை சங்கராச்சாரியருக்கு எழுந்த சந்தேகத்தை போக்கினார்.  சங்கராச்சாரியார் தமிழை விட வடமொழியே உயர்ந்தது என்றும் அதுவே அனைவருக்கும் தாய்மொழி என்றும் கூறினார்.  ஆனால் வள்ளலார், வடமொழி தாய்மொழி என்றால் தமிழ்மொழி தந்தை மொழி என்று கூறி தமிழின் அருமையை உணர வைத்தார்.  இறுதியில் சங்கராச்சாரியரும் அந்த உண்மையை ஒப்புக்கொண்டார்,  இராமலிங்கர் கொடுத்த விளக்கங்களை மிகவும் பாராட்டினார்.

Friday, 29 April 2016

Online Quiz on Saiva Samayam


 1. Manumurai Kanda Vasagam first published in 
  1.  1867
  2.  1855
  3.  1854
  4.  1873

 2. Thonda Mandala Sathagam first published in 
  1.  1873
  2.  1854
  3.  1867
  4.  1855

Thursday, 28 April 2016

Online Quiz on Saiva Samayam


 1. Birth place of Ramalinga Adigal
  1.  Karunkuzhi
  2.  Sirkazhi
  3.  Maruthur
  4.  Chennai

 2. Birth star of Ramalinga Adigal
  1.  Thiruvathirai
  2.  Thiruvonam
  3.  Poosam
  4.  Chithirai
 3. Teacher of Ramalinga Adigal
  1.  Sabapathi Mudaliar
  2.  Sabapathi Pillai
  3.  Irrukkam Rathnam Mudaliar
  4.  Parthasarathy

 4. Wife of Ramalinga Adigal
  1.  Lakshmi Ammal
  2.  Pappathi Ammal
  3.  Chinnamaiyar
  4.  Dhanakotti Ammal

 5. First book of Ramalinga Adigal
  1.  Manumuraikandavasagam
  2.  Thiruvasagam
  3.  Thirumanthram
  4.  Deivamanimalai

 6. Who is the founder of "Sathya Gnana Sabai"
  1.  Velayutha Mudaliar
  2.  Ramalinga Adigal
  3.  Sabapathi Pillai
  4.  Parasuram

 7. Which temple parents took Ramalingam at the age of 5 month
  1.  Kanthakottam
  2.  Vadivudaiamman temple
  3.  Chidambaram Natarajar temple
  4.  Varanasi Viswanathar temple

 8. First speech of Ramalinga Adigal held in
  1.  Chidabaram Temple
  2.  Kanthakottam
  3.  Parathasarathy House
  4.  Somuchettiar House

 9. How many years thiruvotiyur temple visited by ramalinga adigal
  1.  15 years
  2.  20 years
  3.  23 years
  4.  25 years

 10. Founder of "Sathya Dharma Salai"
  1.  Gandhiji
  2.  Thirumoolar
  3.  Sabapathi Pillai
  4.  Ramalinga AdigalWednesday, 27 April 2016

Vallalar Varalaru Contd.....


பள்ளியறையில் மணப்பெண் அலங்காரகோலத்தில் இருக்க இராமலிங்கரோ சிறிதும் சிற்றின்ப ஆசை இன்றி முதலிரவு முழுவதும் "திருவாசகம்" புத்தகத்தினை ஓதிக் கொண்டிருந்தார்.  அவர் கண்களில் நீர் பெருகிற்று.

 அவரின் நிலையைக்கண்ட தனக்கோடி அம்மாளுக்கு தன் கணவர் ஒரு சாதாரண மனிதரில்லை  என்று  உடனே உணர்ந்தது  கொண்டார்.   
இராமலிங்கரின் மனம் இளவயது முதற்கொண்டு வேறொன்றில் இலயித்து போனதால் மற்றதில் நாட்டமில்லை.  இரவுகள்   பல வந்தன.  இராமலிங்கரின் செயலில் மாற்றமில்லை.  திருவாசகம் படிப்பது தினந்தோறும் தொடர்ந்தது.
தனகோடி அம்மாளும் இராமலிங்கரின் ஞான நிலையை புரிந்து கொள்ளும் பக்குவம் பெற்றிருந்தார்.

இராமலிங்கர் அவரது திரு அருட் பா-வில், திருமண உறவிலும் தான் பூண்ட துறவொழுக்கத்தை,

             "முனித்த வெவ்  வினையோ நின்னருட் செயலோ 
 தெரிந்திலேன் மோகமே லின்றித் 
 தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்
 ஒருத்தியைக் கைத்தொடச் சார்ந்தேன் 
 குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் 
 கலப்பினேன் மற்றிது குறித்தே 
                பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் 
 பகர்வதென் எந்தை நீ அறிவாய் "
                                                                                            -திருஅருட்பா 

பற்றி பாடியுள்ளதால் அவரின் உள்மனம் நன்கு விளங்குகின்றது.  நாளடைவில் அவரின் அருட் தாகத்தை உறவினர்களும் புரிந்து கொண்டனர். இராமலிங்கருக்கு இல்லறத்தில் ஈடுபாடு இல்லையே தவிர, அவர் இல்லறத்தில் உள்ளவர்களை வெறுக்கவில்லை.  தன்னுடைய வாழ்க்கைக்கு தேவையில்லாதது, பிறருடைய வாழ்க்கைக்கு தேவையாக இருக்கலாம் என்பதை  நன்கு உணர்ந்திருந்தார்.

இராமலிங்கரின் நண்பர் இறுக்கம் ரத்ன முதலியார், தமது திருமண ஆலோசனை குறித்தும், தம்மை வந்து வாழ்த்த வேண்டுமென கடிதம் வாயிலாக எழுதிக் கேட்டு கொண்டதற்கிணங்க,  அடிகளார் எழுதிய பதில் கடிதத்தில் சில பகுதிகள் ;

"சிரஞ்சீவி நமது ரத்ந முதலியாருக்கு சிவா கடாக்ஷத்தினால் தீர்காயுளும், சகல சம்பத்தும் மேன்மேலும் உண்டாவதாக,--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- பரம சிவத்திடைத்தே மாறாது மனத்தை வைத்துக் கொண்டு புறத்தே ஆயிரம் பெண்களை விவாகஞ் செய்து கொள்ளலாம்.  அன்றியும் விவாகஞ்செய்து கொண்டாலும் அதனால் வருத்தப்பட நம்மை சிவபெருமான் செய்விக்க மாட்டார்.  ஆதலால் சந்தோஷமாக விவாகத்துக்கு சம்மதிக்கலாம்.  தாம் தடை செய்ய வேண்டாம்-"   --என்று

 திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்குமாறு இராமலிங்கர் எழுதியிருந்தார்.
ஆனால்  இராமலிங்கர் திருமணத்திற்கு செல்லவில்லை. ஆனால்  கடிதத்தில் (10-06-1860) வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில் சில பகுதிகள்


                                                                      சிவமயம்
"சிரஞ்சீவி ரத்ந முதலியாரவர்களுக்கு நடராசானுக்கிரகத்தால் சிவாக்கியானமும் தீர்காயுளும் சகல சம்பத்தும் மேன்மேல் உண்டாவதாக.  தங்கள் மணக்கோலத்தை காண கொடுத்து வைக்காதவனாகவிருந்தாலும்  கேட்டு மகிழும்படி பெற்றேன்.  தங்கள் சுபசரித்திர விபவங்களை அடிக்கடி தெரிவிக்க வேண்டும்.  தங்கள் சிவசிந்தனை விடாமல் சர்வ ஜாக்கிரதையோடு லௌகீகத்தை நடத்தி வர வேண்டும்".

 இராமலிங்கர் எழுதிய இரண்டு கடிதங்களே   "தனக்கு பொருந்தாது என்று தன்னால் முடிவு செயப்பட்ட இல்லறவாழ்வு பிறரும் ஏற்க கூடாது என்கிற எண்ணம் இராமலிங்கருக்கு இல்லை.

மேலும் இறுக்கம் ரத்னா முதலியாருக்கு இராமலிங்கர் எழுதிய கடிதத்தில்
"தங்களுக்கு புத்திர பேறு உண்டாயிற்றென்று கேள்விப்பட்டு அளவு கடந்த சந்தோஷத்தை அடைந்தேன்". -என்று குறிப்பிட்டுள்ளார் .

இதன் மூலம் வள்ளலார் பெண்களையும் இல்லற வாழ்வையும் வெறுப்பவர் அல்ல என்பதை அன்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Saturday, 23 April 2016
Vallalar Signature
Vallalar Handwritten BookNatarajar Dance of EvolutionNatarajar Dance of Dissolution

Wednesday, 20 April 2016

Vallalar Varalaru cont.....(Vallalar Marriage; Dhanakottiammal)
வள்ளலாருக்கு நடந்த  திருமணம்:

திருமணம் செய்துகொண்டு வாழ்பவர்கள் இல்லறத்தார்.  திருமணம் செய்துகொள்ளாதவர்  துறவறத்தார்.  சங்ககாலத்தில் இல்லறம் மிகுதியாக போற்றப்பட்டது.  சங்கம் மருவிய காலத்தில் சமண, பௌத்த சமயங்கள் தமிழகத்தில் வளர்ச்சிபெற்றது.  அதன் பயனாக, துறவறத்தார் மிகுதியானார்கள்.  ஆனால் இவர்கள் துறவறத்தில் இருந்தாலும், சமணப் பள்ளிகளில் மற்றும் மலைக்குகைகளில் வாழ்ந்து,  இல்லறத்தார்க்கு மிகவும் உதவியாக இருப்பார்கள்.

சமய போதனைகள் செய்து, கல்வியையும் நன்நெறிகளையும் வளர்த்தனர்.  இவர்கள் மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த பாடுபட்டனர்.  இதனால், துறவிகளுக்கு மக்களிடையே பெரும் மதிப்பு ஏற்பட்டது.  சங்கம் மருவிய காலத்தில் துறவறத்தார் போற்றப்பட்டனர்.

19-ஆம் நூற்றாண்டில், இந்தியாவில் திருமணம் செய்து கொண்டு சமயம் மற்றும் சமுதாய வாழ்விலும் ஈடுபடலாம், என்பதற்கு சான்றாக வடக்கில்  இராமகிருஷ்ண பரமஹம்சரும், தெற்கில் இராமலிங்கரும் வாழ்ந்தனர்.

                                                  Ramakrishnar with his wife Sharada Devi

19-ஆம் நூற்றாண்டில், நம் நாட்டில் இளம் வயது திருமணமே நடந்துள்ளது.  ஆனால் இராமலிங்கர் உலகியல் ஆசை துறந்து,  துறவு ஒழுக்கம் மேற்கொண்டதால், இவரது திருமணம் காலதாமதமாக 1850-ம் ஆண்டு நடைபெற்றது என ஊரன் அடிகள் குறிப்பிட்டுள்ளார்.

சகோதரி உண்ணாமுலையின் மகள் தனகோடி அம்மாளை திருமணம் செய்துவிக்க  இராமலிங்கத்தின் குடும்பத்தினர் முடிவுசெய்தனர்.

திருவொற்றியுருக்கு சென்று தன்னை திருமணபந்தத்தில் சிக்க வைத்ததற்காக இறைவனிடம் கண்கலங்கி முறையிட்டார். அத்திருக்கோயிலில் தினமும் தான் சந்தித்து உரையாடும் சிவயோகியிடம்  தனது திருமண ஏற்பாடுகள் பற்றி கவலையுடன் முறையிட்டார்.  அதற்கு தவயோகி 'தாய் சொல்லை தட்டாதே' இறைவனின் சித்தப்படி அனைத்தும் நடைபெறும் .  கவலை வேண்டாம் என  அறிவுறுத்தினார்.  இராமலிங்கரும் அவரது வாக்கினை குருவாக்காக கொண்டு,  திருமண ஏற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மெளனமாக இருந்தார் நமது அடிகளார்.

தனகோடி அம்மாளுக்கும்  இராமலிங்கருக்கும் நல்ல முறையில் திருமணம் நடைபெற்றது.

ஆனால்  இராமலிங்கரை பொருத்தவரை "மணம்"  என்றால் இறைவனோடு ஆன்மா சென்று கூடுவதைத்தான்.

Monday, 18 April 2016

Vallalar Varalaru Cont.....(Poliarutpa Maruppu: Vallalar Sandal; thirumurai)வேலாயுத முதலியார், இராமலிங்கரின் பாடலை தொகுத்து அதற்கு "திருஅருட்பா" என பெயரிட்டு முதன்முதலில் 1867-ஆம் ஆண்டு வெளியிட்டார்.  இவர்  காலத்தில் வெளிவந்த " போலியருட்பா மறுப்பு" என்னும் நூலுக்கு மறுப்பாக, வேலாயுத முதலியார்  "போலி யருட்பா மறுப் பென்னும் குதர்க்காரன்ய நாச மகா பரசு" என்னும் நூலை எழுதி வெளியிட்டார்.  வடமொழியிலும் வல்லுநரான இவர்,  சென்னை ,மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இவர்,  திருஅருட்பாவை தொகுத்து, முதல் நான்கு திருமுறைகள் 1867-ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.  வேலாயுத முதலியார் தொகுத்ததில், இராமலிங்கரால், ஒற்றியூர் வழிப்பாட்டு காலத்தில், பாடப்பட்ட  அருட்பாடல்கள் இரண்டாம் திருமுறையின் பெரும்பகுதியிலும், மூன்றாம் திருமுறை முழுவதிலும்  இடம் பெற்றுள்ளன.

மேலும், வீராசாமி முதலியார், சீனிவாச வரதாச்சாரியார், பொன்னேரி சுந்தரம் பிள்ளை , ஆறுமுக அய்யா என பல மாணவர்கள், இராமலிங்கரிடத்தில் தமிழ் கற்கவும், தெய்வீக உறவிற்காகவும், அனுபவம் பெறுவதற்காகவும் அவரிடத்தில் இருந்தனர்.  இதனால் அவருக்கு தனிமை என்பதே அரிதாகிப் போனது.

தியானம் செய்வதற்காக இவருக்கு தனிமை தேவைப்பட்டது.  சில சமயங்களில் இவர் சென்னையின் சுற்றுப்புறங்களில், அதாவது , பல்லாவரம், பிருங்கி மலை, திருநின்றவூர் , திருமயிலை , மந்தவெளி , திருவான்மியூர், புழலேரி, செங்குன்றம்  போன்ற பகுதிகளிலெல்லாம் தங்கியிருந்து தனிமையில,  திருவருளை நாடியிருந்தார்.  வள்ளலார் பாதம் பட்ட, தங்கிய இடங்களிலெல்லாம் சென்னை நகர்ப்புறங்களில் இன்று வாழும் மக்கள் எத்துணை! புண்ணியம் செய்தவர்கள்! என்றே நினைக்க தோன்றுகிறது.

ஊர் புறத்தே இருந்த காடுகளிலும், மேடுகளிலும் திரிந்துற்ற இளைப்பை வள்ளலார் "திருஅருட்பா" -வில் குறிப்பிடுகின்றார்.


"தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் 
   சிலுகுறும் என்னுளம் பயந்தே 
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே 
    நண்ணினேன்; ஊர்ப்புறம் அடுத்த 
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் 
   களத்திலே திரிந்துற்ற இளைப்பை 
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் 
  எந்தைநீ அறிந்தது தானே!"

என்ற வரிகள் மூலம் சென்னையின் சுற்றுவட்டாரத்தில் தனிமையை நாடி திரிந்ததை அறிந்துகொள்ளலாம்.

அந்த காலத்தில் இறையருள் நாட்டம் மிக்க யோகிகள், செருப்பு அணிந்து கொள்ள மாட்டார்கள்.   ஆனால் வள்ளலார்,  செருப்பு அணிந்து கொண்டிருந்தார்.

vallalar slipper
சென்னையில், இவரது தவ வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது.  தம்பியின் வளர்ச்சி கண்டு அண்ணன் சபாபதி பிள்ளை மிகவும் மகிழ்ந்தார்.  இராமலிங்கருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

Wednesday, 13 April 2016

Vallalar Varalaru Cont.....(Velayutha Mudhaliar: First Student)

தொழுவூர் வேலாயுதம் முதலியார், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தவர்.  நல்ல புலமை மிக்கவர்.  இவர் இராமலிங்கரின் மொழிப் புலமையை சந்தேகித்தார்.   "இராமலிங்கரை மக்கள் தமது அறியாமையால் தான் கொண்டாடுகின்றனர்" என்றும் "அவர் ஒன்றும் அவ்வளவு பெரிய திறமைசாலியாக இருக்க முடியாது" என்றும் நம்பினார்.  தானே நேரில் சென்று இராமலிங்கரை சோதித்து விடுவது என முடிவு செய்தார்.

மிகக் கடினமான சொற்களைக் கொண்டு சில கவிதைகளை தாமே புனைந்தார். அவற்றை எடுத்துக் கொண்டு இராமலிங்கரை சந்தித்தார். அய்யா! இவை மிகவும் பழமையானது.  என் வீட்டு பரண் மேல் இத்தனைக் காலம் யாரும் கவனிக்காமல் இருந்தது.  நீங்கள் இதனை படித்து புரியும் படியாக விளக்கி பொருள் சொன்னால் நன்றாயிருக்கும். என்று கூறி அந்த கவிதைகளை இராமலிங்கரிடம் காட்டினார்.

அதனை வாங்கிப் பார்த்த இராமலிங்கர், நம்மை சோதிப்பதற்காகவே இதை கொண்டு வந்திருக்கிறார், என்பதை உடனே உணர்ந்து கொண்டார்.  மேலும், இந்த பாடல்கள் பழங்காலத்தவை அல்ல! யாரோ இலக்கணம் தெரியாதவர் இதனை எழுதியிருக்க வேண்டும். சங்க பாடல்களில் இவ்வளவு தவறு இருக்காது என திட்டவட்டமாகக் கூறினார்.  சோதிக்க வந்த தொழுவூர் வேலாயுத முதலியார் வெட்கி தலை குனிந்தார்.

தன்னை சீடராக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.  இராமலிங்கரும் இவரை மன்னித்து சீடராக ஏற்றுக்கொண்டார். இராமலிங்கரின் புகழ் பரவியது போல், இராமலிங்கரின் மாணவரான வேலாயுத முதலியாரின் பெருமையும் பல்கி பெருகியது.  அவரது அறிவு திறத்தை பாராட்டி, "உபய கலாநிதிப் பெரும் புலவர்" என்ற பட்டத்தையும் தொழுவுராருக்கு சுட்டினார் நமது வள்ளலார். சீடர்களில் தலைசிறந்தவராக தொழுவுரார் விளங்கினார்.

Monday, 11 April 2016

Vallalar Varalaru cont....(Manumurai kanda vasagam: Thonda Mandala Sathagam, Thozhuvurar)சொற்பொழிவு ஆற்றும் இடங்களில் அதற்காக தரும் சன்மானத் தொகையை இராமலிங்கரிடத்தில் கொடுப்பர்.  அவ்வாறு கிடைக்கும் பணத்தை வரும் வழியில் கிணற்றிலோ, குளத்திலோ வீசி எறிந்து விடுவார் நமது வள்ளலார்.  இதனை,

                          "பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலை
                            நான் படைத்தஅப் பணங்களைப் பலகால் 
                            கிணற்றிலே எறிந்தேன் குளத்திலே எறிந்தேன் 
                            கேணியில் எறிந்தனன் எந்தாய் "

என்று தம் பாடல்கள் மூலம் வெளிப்படுத்துகின்றார்.

இராமலிங்கர் பொருளாசையின்றி அதனை எரிந்துவிடுவதை கண்ட சோமு செட்டியார் சன்மானத்தை நேரடியாக சபாபதி பிள்ளையிடம் அளித்து வரலானார்.  ஆதலால், இராமலிங்கரது குடும்பம் வறுமையின்றி வாழ முடிந்தது.

  சிறுவயதிலேயே இராமலிங்கரின் திறமையை அறிந்த,  இராமலிங்கரின் ஆசிரியராக இருந்த சபாபதி முதலியார், இராமலிங்கரை சந்தித்து, குழந்தைகள், பெரியவர்கள் உள்பட அனைவரும் படித்து பயன் பெரும் வகையில் நூலொன்றை எழுதித் தருமாறு வேண்டிக் கொண்டார்.  இராமலிங்கரும், ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்கி எழுத ஆரம்பித்தார்.   அதுதான் "மனுமுறை கண்ட வாசகம்".

பெரியபுராணத்தில் உள்ள மனுநீதி கண்ட புராணத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.  இந்நூல் ராமலிங்கரின் மொழித் திறமைக்கு, சான்றாக விளங்குகிறது. அந்த அற்புத நூலை வள்ளலார்,

                       "நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ!
                        வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
                        தானங்கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
                        கலந்த சிநேகரை கலகஞ் செய்தேனோ!"

எனத் தொடங்கியிருப்பார் . சென்னை சாஸ்த்திர விளக்க சங்கத்தினரால் 1854 ஜூன் மாதம் வெளியானது.

பின் தன் அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க தொடர்ந்து ஒழிவிலொடுக்கம், சிவநேச வெண்பா, இங்கித மாலை, மகாதேவ மாலை, நெஞ்சறிவுறுத்தல் என பல்வேறு புத்தகங்களை வெளியிட்டு வரலானார்.

"தொண்ட மண்டல சதகம்"  படிக்காசு புலவர்  எழுதிய நூல்.  இந்நூல் தொடர்பாக எழுந்த சர்ச்சையை தீர்க்கவேண்டி அய்யாசாமி முதலியார் என்பார் இராமலிங்கரை அணுகி சரியானது எது என விளக்கி கூறுமாறு கேட்டுக்கொண்டார்.

இராமலிங்கரும் கல்வெட்டுகள், சுவடிகள் என ஆராய்ந்து, "ஆதொண்டன் என்ற மன்னன் ஆண்ட பகுதி இது,  அதனை பற்றிய நூல்தான் இஃது" . எனவே தொண்ட மண்டல சதகம் என அழைப்பதே தீர்வானது என கூறினார்.  இராமலிங்கரே தமிழ் நாட்டின் முதல் கல்வெட்டு ஆய்வாளர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அய்யா சாமியின் வேண்டுகோளுக்கிணங்கி இராமலிங்கர் தன் ஆய்வை  "நூற்பெயர் இலக்கணம்" என்ற பெயரில் நூலாக வெளியிட்டார்.

அதுமுதல் இராமலிங்கரின் புகழ் அதிகமாக பரவியது. இவர் ஓர் தமிழ் அறிஞராக மதிக்கப்பட்டார்.  தன் சொல்லாற்றல் மிக்க பாடல்களால் புகழ் பெற்றார்.

 மனுமுறை கண்ட வாசகம்  மற்றும் தொண்ட மண்டல சதகம் ஆகியவை திருவருட்பா -வில் உரைநடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இராமலிங்கரின் முதல் மாணவர்:

இராமலிங்கரின் ஆற்றல் வெளிப்பட வெளிப்படச் சாதாரண மக்கள் முதல் கற்றவர், அறிஞர் வரை இவரை அணுகினர்.  தமிழ் அறிவிற்காக, தெய்வீக உறவிற்காக, மருத்துவ குறிப்பிற்காக, ரசவாத வித்தைக்காக, சமய கருத்துக்களுக்காக என பலதரப்பட்டவர் நாடி வந்தனர்.

அவ்வாறு வந்தவர்களுள் சிலர், இவரின் அன்பர்களாயினர்.  சிலர் மாணவர்களாயினர்.  அதில் குறிப்பிடத்தக்கவர் தொழுவூர் வேலாயுத முதலியார்.  1849-ஆம் ஆண்டு வேலாயுத முதலியார் மாணவராக சேரும் போது அவருக்கு அகவை 17. வள்ளலாருக்கு வயது 26, என ஊரன் அடிகள் குறிப்பிடுகிறார்.

இராமலிங்கரிடம் காணப்பட்ட தமிழ் புலமையின்  புகழ் பரவியதால் அவருடைய தமிழறிவை சோதிக்க சென்றவர்தான் தொழுவூர் வேலாயுதம் பிள்ளை.

தொழுவூர் வேலாயுதம் பிள்ளை

Saturday, 9 April 2016

Vallalar Varalaru contd....(Thiruvotriyur; Grace of Vadivudaiamman)சென்னை சோமு செட்டியார் வீட்டில் சொற்பொழிவு நிகழ்த்தியபின் இராமலிங்கரின் அறிவாற்றலும், புகழும் சென்னை நகரம் எங்கும் பரவிற்று.  சொற்பொழிவாற்றுவதிலும், பாடல் இயற்றுவதிலும், ஆன்மிக அனுபவத்தை பெறுவதிலும் படிப்படியாக தம் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.

தம்பியின் சிறப்பை ஓரளவு உணர்ந்த சபாபதி பிள்ளை, ஒருநாள் இராமலிங்கரின் சொற்பொழிவை மறைந்து நின்று கேட்டார்.  இராமலிங்கரின் உள்ளொளி பெருக்கை தமையனார் உணர்ந்து கொண்டார்.  அது முதல் அண்ணன் அண்ணிக்கும்  இவரிடத்தில் பெருமதிப்பு உண்டாகிற்று.  அவர்கள் காட்டிய மரியாதை, இவரின் இயல்பு வாழ்க்கைக்கு தடையாக தோன்றியது.  வீட்டில் இயல்பாக இருக்கமுடியாமல் தவித்தார்  நம் வள்ளல் பெருமகனார்.


திருவுடை அம்மன் உடனாய தியாகராஜர் திருக்கோயில், 
திருவொற்றியூர், சென்னை.

இக்காலகட்டத்தில், இராமலிங்கர் தனிமையை கருதி நாள்தோறும் திருவொற்றியூர் சென்று வரலானார்.   திருவொற்றியூர் தியாகேசர் மீது பக்தி பாடல்கள் இயற்றினார்.  தியாகேசர் மீது அதிக ஈடுபாடு ஏற்பட்டதால் பெரும்பாலான நாட்களை திருவொற்றியூரில் கழித்தார்.  12-வயதில் தொடங்கி 35-வது வயது வரை சுமார் 23-ஆண்டு காலம் வள்ளலார் திருவொற்றியூர் தியாகேசரையும்,  வடிவுடை அம்மனையும் வழிபட்டார்.  

அன்றாடம் திருவொற்றியூர் சென்று திரும்பும் போது, சற்று காலம் கடந்து வீடு திரும்பினார்.  அப்போது வீட்டின் கதவு மூடியிருந்த நிலையில் திண்ணையில் படுத்து விட்டார்.  சற்று நேரம் கழித்து தம் "அண்ணியார்" உணவு கொடுக்க வாங்கி உண்டு விட்டு படுத்தார்.

மீண்டும் சிறிது நேரம் கழித்து இராமலிங்கரின் அண்ணி இவரை எழுப்பி உணவு உண்ணுமாறு கூற, இராமலிங்கர் வியப்புடன் " சற்று நேரம் முன் நீங்கள் தானே!  எனக்கு உணவு உண்ண கொடுத்தீர்கள்?  நானும் உண்டேனே!  தற்போது ஏன் மீண்டும் எழுப்புகிறீர்கள் என கேட்டார்.

அண்ணியாரும் வியப்புற்று "நான் இப்போது தான்  உணவு கொண்டுவருகிறேன் என்றால் வந்தது யார்" என ஐயமுடன் வினவ , இராமலிங்கரும்,  தாயுள்ளத்தோடு வந்து எனக்கு உணவளித்தது அந்த வடிவுடை அம்மனைத் தவிர யாராக இருக்கமுடியும்!  எனத் தெளிந்தார்.

இந்நிகழ்ச்சியை இராமலிங்கர் தனது "அருள் விளக்க மாலை"  என்னும் பகுதியில் இறைவியால் தனக்கு உணவளிக்கப்பட்டது பற்றி பாடியுள்ளார்.
                                         
                                                 
" தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம் 
   திரு அமுதோர் திருகரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே 
   ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றனையங் கெழுப்பி 
    உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே" 

என்றும்,

" இருள் இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே 
 இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே 
 பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
 போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே"

என்றும்  வடிவுடை அம்மனின் அருளைப் பாடுகின்றார்.

Thursday, 7 April 2016

Vallalar Varalaaru cont...(Ramalingar's first speech: Somu Chettiar) இராமலிங்கரின் முதற் சொற்பொழிவு:

9-வயதில் தொடங்கிய அருள்வாழ்க்கை வரவர முதிர்ச்சி பெற்று 12-வயதில் ஞானவாழ்க்கையாக மலரத்தொடங்கியது.  அவருக்குள் உள்முகமாகவே வளர்ந்து கொண்டிருந்த ஆற்றல், சுற்றுவட்டாரத்தில் பரவ அவர் நிகழ்த்திய முதல் சொற்பொழிவே காரணமாக அமைந்தது.  19-ஆம் நூற்றாண்டில் சில செல்வந்தர்கள் தங்கள் செலவில் புராண சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்வார்கள்.  மேலும் புராண சொற்பொழிவு ஒரு பொழுதுபோக்கு அம்சமாக அக்காலகட்டத்தில் நடைபெற்றது.  அந்த வகையில், சென்னை, முத்தியாலுபேட்டையில் உள்ள சோமுசெட்டியர் வீட்டிலும்,  அண்ணன் சபாபதி பிள்ளை அவர்களின், சைவசமய சொற்பொழிவு தொடர்ச்சியாக வாரம் தோறும் நிகழ்ந்தது.

ஒரு சமயம், சபாபதி பிள்ளை தான் நிகழ்த்தும் புராண சொற்பொழிவுக்கு, கையேடு வாசித்து வரும், பெண்ணுக்கு உடல்நலமின்மையால் கையேடு வாசிக்க ஆளில்லாமல் கலங்கியிருந்தார்.  இராமலிங்கரும் தம் அண்ணியின் சொல்லுக்கிணங்கி, தம் தமையனின் சொற்பொழிவில் கையேடு வாசித்து வந்தார்.  சபாபதி பிள்ளைக்கு ஒருநாள் உடல்நலக்குறைவு ஏற்பட, அவர் வழக்கமாக செல்லும் புராண சொற்பொழிவுக்கு செல்ல இயலவில்லை.  ஆதலால் பாப்பாத்தியம்மாள், இராமலிங்கரிடம் சென்று உன் அண்ணனுக்கு உடல்நலமின்மையால், சொற்பொழிவு நடக்கும் இடத்தில் நீ சென்று ஓரிரு பாடல் பாடிவிட்டு, கற்பூர ஆரத்தி காட்டிவிட்டு வா, என கேட்டுக்கொண்டார்.

இராமலிங்கரும் செட்டியாரின் இல்லம் சென்று செய்தி தெரிவித்து அவருக்கு பதிலாக தாம் இரண்டொரு பாடல்களை படித்துவிட்டு செல்வதாக தெரிவித்தார்.  செட்டியாரும்,  "ஒன்றுமில்லாமல் இதுவாவது நடக்கிறதே" என அரைகுறை மனதோடு சம்மதிக்கிறார்.

பன்னிரண்டு வயதில் இராமலிங்கர் நிகழ்த்திய முதல் சொற்பொழிவு நடுநிசி வரை நடைபெற்றது.   முதல் பாடலின் விரிவுரையே முடியவில்லை.  சொற்பொழிவு கேட்க வந்தவர் மெய்மறந்திருந்தனர்.  முருகனின் தரிசனத்திற்கு பின் ராமலிங்கரின் செயல்களில் ஒரு புதுப் பொலிவு, புது வேகம், மனத்தெளிவு, மனஒருமைப்பாடு  யாவும் இவரின் முதற் சொற்பொழிவின்போது வெளிப்பட்டது.  இனிமேல் ராமலிங்கரே தொடர்ந்து சொற்பொழிவாற்ற  வேண்டும் என சோமுசெட்டியாரும் மற்றும் அங்கிருந்த பலரும் கேட்டுக்கொண்டனர்.  அதன்படி இராமலிங்கரும் தொடர்ந்து சொற்பொழிவாற்றி வந்தார்.  

Tuesday, 5 April 2016

Vallalar Varalaru Cont.......(Questions and Answers:)
 "சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் " -எனத் தொடங்கும் திருத்தணிகை மாலையை இராமலிங்கம் பாடினார்.  9-வயதிலேயே இறைவன் அவருக்கு அருள் வழங்கி விட்டான்.  முருகதரிசனத்திற்கு பிறகு அவரது ஆற்றல் யாருக்கும் தெரியாமல் உள்முகமாக வளர்ந்து வந்தது. தாம் சிறுபிள்ளையாக இருக்கும் போதே பாடல் பாடும் ஆற்றலை இறைவன் தமக்கு தந்திருப்பதை

                    "உருவத்தை லேசிறி யேனாகி யூகத்தி லொன்றுமின்றி
                      தெருவத்தி லேசிறு கால்வீசி யாடிடச் சென்ற அந்தப் 
                       பருவத்தி லேநல் அறிவளித் தேவனைப் பாடச் செய்தாய் 
                       அருவத்தி லேஉரு வானோய்நின் தண்ணளி யார்க்குளதே"

என்ற அருட்பா பாடலில் குறிப்பிடுகின்றார்.

மேலும் இவர் அண்ணன் அண்ணியின் மேற்ப்பார்வையில் வளர்ந்தவர்.  சிறுவயதில் சிறுவர்களுக்கு வழக்கமாக தோன்றுவதுபோல் தமக்கு தோன்றிய சந்தேகங்களை எல்லாம்  தம் அண்ணியாரிடத்தில் கேட்டுள்ளார்.
ஆனால் இச்சிறுப்பிள்ளைக்கு தோன்றிய சந்தேகங்கள் அனைத்தும் தத்துவங்கள் நிறைந்தது.

இறைவன் நம் முகத்தில் இந்த மூக்கை வாய்க்குமேலே ஏன் வைத்தார்?  என அண்ணியிடம் கேட்கிறார்.  அண்ணிக்கு தெரியவில்லை  பின் அவரே விளக்குகின்றார் .  "அண்ணி!  பெரிய மனிதர்கள் வீட்டில் மூன்று வேளையும் சமைப்பார்கள்.  நடுத்தரமானவர்கள் வீட்டில் ஒருவேளைக்கு சமைத்து, மூன்று வேளையும் வைத்து கொள்வார்கள்.  சாதம் பிசைந்து வாய்க்கருகே கொண்டுபோகும் போது, அது நல்லது என்று வாய்க்குள் செல்ல அனுமதிப்பதே மூக்குதான்.  அதனால்தான் இறைவன் மூக்கை வாயினருகில் வைத்தார்" என விளக்கி கூறுகிறார்.

ஒருநாள் கோயிலுக்கு செல்ல பாப்பாத்தியம்மாள் பூஜைக்குரிய பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.  அப்போது அதைக்கண்ட இராமலிங்கர், "அண்ணி! கோயிலுக்கு கொண்டுபோகும் தேங்காய், பழம், பூ, வெற்றிலைப்பாக்கு எல்லாம் வெளியே வரும், ஆனால் ஓரேஒரு பொருள் மட்டும் வராது? அது என்ன?"  என கேட்கிறார்.  அண்ணியாரும் நீயே சொல்லிவிடப்பா என கேட்கிறார்.

இராமலிங்கரும், அண்ணி, அதுதான் கற்பூரம்.  கற்பூரம் ஜோதியிலே ஒன்றுவதுபோல் ஜீவன் சிவனோடு ஒன்றிவிடவேண்டும்.  என தத்துவார்த்தமாக கூறுகிறார் அந்த ஏழு வயது சிறுவன்.

மேலும் ஒருநாள், அவர்  " அண்ணி! இந்த உடம்பு அசித்து, ஆன்மா சித்து.  அசித்தோடு சித்து சேரக்கூடாது .  அசித்து அறிவில்லாதது .  சித்து அறிவுள்ளது.  வண்டிக்கு அறிவு கிடையாது . எருதுக்கு அறிவு உண்டு. அறிவுள்ள எருது வண்டியில் தானே நுழையாது.  அறிவில்லாத வண்டி தானே போய் மாட்டின் மேல் உட்காராது.  வண்டிக்கும் மாட்டுக்கும் உரியவன், வண்டியில் மாட்டை நுழைத்து பூட்டாங்கயிறு பூட்டி வண்டியிலே அமர்ந்து வண்டியை ஒட்டுகின்றான்.  அதுபோல,  சரீரத்தில் ஜீவாத்மாவை நுழைத்து பிராணவாயு என்னும் பூட்டாங்கயிறு பூட்டி இறைவன் உள்ளே இருந்து கொண்டு நம்மை நடத்துகின்றான்.  எப்போது அவிழ்த்து விடுவான் என்று யாருக்கும் தெரியாது.  அந்த மரணம் வருவதற்குள்ளாக இறைவனை நாடியிருக்க வேண்டும் "  என்று இராமலிங்கர் அவர் அண்ணியிடத்தில் உரையாடும்போது அவருக்கு வயது ஏழு.

மேலும், "அண்ணி! கோயிலில் தேங்காய் ஏன் உடைக்கிறார்கள் தெரியுமா?, தேங்காய்க்கு மேலேயிருக்கிற மட்டை மாயாமலம். உரிச்சி எடுக்கிற  நார் கன்மம், உடைக்கப்படும் ஓடு ஆணவ மலம்.  இந்த ஆணவம், கன்மம், மாயை விலகினால் சித்த சித்தி எனும் பருப்பு கிடைக்கும்."  இவ்வாறாக அண்ணிக்கு பற்பல தத்துவங்கள் சொல்லி வந்தார் நமது வள்ளல்பெருமான்.

அறிஞர் ம.பொ.சி. கூறிய கருத்து இங்கே நினைவு கூறத்தக்கது,  "அறிவு என்பது ஏட்டில் பிறந்து,  பின் மனிதர் மண்டையில் புகுவதன்று.  அது மனிதர் மண்டையில் பிறந்து பின் ஏட்டில் ஏறுவதாகும்.  ஓதி உணர்ந்தவர்களை விட, ஒதாதுணர்ந்தவர்களே, மெய்ப்பொருளை அணுகும் ஆற்றல் பெற்றிருக்கின்றனர்" என உணர்ந்து கூறுகின்றார்.

Monday, 4 April 2016

Vallalar Varalaru cont...(Grace of Arumuga)

தணிகை முருகனின் தரிசனம் பெற்ற கணமே அவர் உள்ளுணர்வு தூண்டபெற்று

" சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
 தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர்
 கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமஅருட்
 கார்கொண்ட வண்மைத் தணிகா சலமுமென் கண்ணுற்றதே !"

என அந்த காட்சியை அனுபவித்து பாடுகின்றார்.  (இந்த அறை சென்னை ஏழு கிணறு பகுதியில், பழைய எண் 38, வீராசாமி பிள்ளைத் தெரு, இல்லத்தில் இப்போதும் இருக்கிறது.)   இதே உள்ளுணர்வுதான் இராமலிங்கரின் மனதில் வளர்க்க வேண்டியவற்றை வளர்த்து, தள்ள வேண்டியவற்றை தள்ளி தக்க வழிகாட்டியாக இருந்திருக்கிறது.  உள்ளுணர்வு தூண்டப்பெற்றதால் தனித்திருந்து படிக்கும் உணர்வை பெற்றார்.  திருவாசகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.  நிறைய நூல்களை இவ்விதமே கற்றறிந்தார்.  இதனை

                               "குமாரபருவத்தில் என்னை கல்வியிற் பயிற்றும்
                                ஆசிரியரையின்றியே என்றரத்திற் பயின்றறிதற்கருமை
                                யாகிய கல்விப் பயிற்சியை எனதுள்ளகத்தேயிருந்து
                                பயிற்றுவித்தருளினீர்"
                                   
என்று சத்திய பெருவிண்ணப்பத்தில் குறிப்பிடுகின்றார்.  வேதம், மருத்துவம், ஜோதிடம் போன்ற கலைகள் பற்றிய அறிவை உள்ளுணர்வு உணர்த்தியது பற்றி "திருஅருட்பா" வில் பல இடங்களில் குறிப்பிடுகின்றார்.

Saturday, 2 April 2016

Vallalar Varalaru cont....(Muruga Dharsan at mirror; Theivamanimalai)"உருவாய் அருவாய் உளதாய் இலதாய் 
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் 
கருவாய் உயிராய் கதியாய் விதியாய் 
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே"
                                                -கந்தர் அநுபூதி 

வள்ளலார் தொடக்க காலத்தில் இறைவனை பலவடிவங்களில் வணங்கினார்.  முருகன், சிவலிங்கம், நடராஜர்  என்ற மூன்று வடிவங்கள் அவர் உள்ளத்தை கவர்ந்தன.   அதில் கண்கண்ட தெய்வமாய், குருவாய் திகழ்ந்தவர் முருகன். அவர் வணங்கிய ஆறுமுகக்கடவுள் குருவாய் நின்று அவர் உள்ளத்தில் அணையாத ஆத்ம ஜோதியை ஏற்றி வைத்தார்.

வள்ளலார் வழியில் செல்ல நினைப்பவர்கள் முருகனை வழிபடுகுருவாகக் கொள்ளலாம்.   கந்தகோட்டத்தில்தான்  "இரந்து இரந்து உருக என் மனத்துள்ளே எழுகின்ற ஜோதியே"  என்ற மாணிக்கவாசகரின் இறையனுபவத்தை தானும் உணர்ந்தார்.                                
                                              Image result for Theiya Manimalai,Tamil Devotional Book

கந்தகோட்டத்தில் மெய்மறந்து தியானத்திலமர்ந்து  அருட்பாடல்களை பாடியருளினார்.  அதுதான் தெய்வ மணிமாலையும், கந்தர் சரணபத்தும் ஆகும்.    வள்ளலாரால் முதலில் பாடப்பெற்றது தெய்வமணிமாலை.  அதில் முதற்பாடல் " திருவோங்கு புண்ய செயல் ஓங்கி அன்பருள்  திறலோங்கு செல்வம் ஒங்க"   எனத்தொடங்குகிறது.  இப்பாடல் அருட்பாவின் முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.  இப்பாடல் பாடப்பெற்ற பிறகே,  திருப்பணி செய்யபெற்று கோயிலும் சிறப்புற்று விளங்கியது.  கந்தகோட்டத்தை முதன்முதலில் பாடியவர் இராமலிங்கரே ஆவார்

இவரின் அருட்தாகத்தை,  வள்ளலார் ஓர் அவதார புருஷர் என்பதை, இவரது ஆசிரியர் சபாபதிமுதலியார் மகிழ்வோடு கண்டுகொண்டார்.

தனது அண்ணனின்  கட்டளைக்குபின் வீட்டின் பின்புற வாயில் வழியாக இராமலிங்கர் போய் உணவு உண்டு வருவது வழக்கமாகும்.  அன்று அவரது தந்தையின் நினைவு நாள்.  அதனால் உற்றார் உறவினர் அனைவருக்கும் மதிய உணவை அளித்தனர்.  பலரும் வந்து சென்ற பின், கணவரின் ஆணையை மீறி இராமலிங்கருக்கு ஆறிப்போன உணவை பரிமாற நேர்ந்த போது, பாப்பாத்தியம்மாளின் தாயுள்ளம் கண்ணீர் சிந்தியது.  மனம் தாளாமல் ராமலிங்கரிடம் "இப்படி நடந்து கொள்கிறாயே, உன் அண்ணனின் சொற்படி பள்ளிக்கு சென்றால் உனக்கு இந்த நிலையில்லையே"  என கண்ணீர் விட்டு வருந்தினார்.

தம் அண்ணியின் கண்ணீரையும், அரவணைப்பும் கண்டு மனம் வருந்தி தம் செயலை மாற்றிக்கொண்டு வீட்டிலேயே அமர்ந்து படிக்க முடிவு செய்தார்.  இனிமேல் நம் வீட்டு மாடியிலுள்ள தனியறையில், தனியே தங்கி படிக்கிறேன், என்று அண்ணன் அண்ணியிடம் உறுதி கூறுகிறார்.

 "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
   எழுமையும் ஏமாப்பு  டைத்து ."

நாம் கற்று உணர்ந்தவை பிறவிகள்தோறும் உடன்வந்து நமது  வாழ்க்கைக்கு துணை நிற்கும்.  இதுவே இயற்கையின் நியதி.  நமது இராமலிங்கரின் அருளும் ஆற்றலும் இத்தகையதே.

வள்ளலார் கண்ட முருகன்

இராமலிங்கரும் நிலைக்கண்ணாடி ஒன்றும், சுகந்த ஊதுபத்திகளும் வாங்கி வந்து தமது அறையில், மாடியில் வைத்துக்கொண்டார்.  பக்தி என்பது நமது உள்ளுணர்வை மேம்படுத்தி வாழ்வின் சரியான திசைக்காட்டியாக அமையும்.  ராமலிங்கர் நிலைக்கண்ணாடிமுன் ஐந்து முக குத்துவிளக்கை ஏற்றி வைத்தார்.  அதன் எதிரில் மனம் ஒன்றி தியானத்தில் அமர்ந்தார்.  சிறுவயது முதற்கொண்டே முருகனை வழிபடு கடவுளாக கொண்டிருந்ததால், அவரைக்காண ராமலிங்கரின் மனம் விழைந்தது.  அவரது மனத்தெளிவும், மனஒருமைப்பாடும் அவரை முருகனை காணவைத்தது.  தணிகைமுருகனை கண்ணாடியில் கண்டார்.  ஆறுமுகத்தோடும், பன்னிருதோள்களோடும், வேலோடும், மயிலோடும், கோழிக்கொடியோடும் திருத்தணிகை முருகன்  கண்ணாடியில் காட்சித்தந்தான்.  நம் வள்ளல்பெருமான் அவரை கண்குளிரக்கண்டார்.

இவர் காலத்தில் வாழ்ந்த இராமகிருஷ்ண பரமஹம்சர் காளிதரிசனம் பெற்றதும்;  திரு பாம்பன் சுவாமிகள் முருகதரிசனம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.