Wednesday, 30 March 2016

Vallalar Varalaru cont...(Education: Kandhakottam)

 19-ஆம் நூற்றண்டில் இருவகையான கல்வி முறை இருந்தது.  ஆங்கில கல்விமுறை மற்றொன்று நம் நாட்டு பாரம்பரிய கல்விமுறை.  ராமலிங்கரின் குடும்பத்தினருக்கு நம் நாட்டு கல்விமுறையில்தான் நாட்டம் இருந்தது.

சின்னம்மையாரின் இளைய பிள்ளைக்கு, இவர் தம் கணவனார் செய்து வந்த கணக்கர் வேலை கிடைக்கவே சின்னம்மையார் பிள்ளைக்கு துணையாக கருங்குழிக்கு சென்று விட்டார்.  இரண்டு பெண்களை நல்ல இடமாக பார்த்து மணம் முடித்து வைத்தார்.

இப்போது சென்னையில் சபாபதி, பாப்பாத்தி, வள்ளலார் ஆகிய மூவர் மட்டுமே.

ஆசிரியர் காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் ஏட்டுகல்வி கற்க நாட்டம் இன்றியும், தம்முடன் படிக்கும் மாணவர்களுடன் ஒன்றி பழக இயலாமலும் தவித்தார் இராமலிங்கர்.

வயதுக்கு மீறிய மனபக்குவம் பெற்றிருந்தமையால் இராமலிங்கரின் மனம் வேறொரு இடத்தில்  இலயித்திருந்தது.  பாடம் படிப்பதில் நாட்டம் செலுத்தாமல் கோயிலுக்கு செல்வதிலே மனம் அமைதியுற்றார்.  உரிய வயதில் தந்தையின் அரவணைப்பும் இன்றி, தாயின் அருகாமையும் இன்றி, அவவப்பொழுது நேர்ந்த இடமாற்றமும்,  அதனால் அலைபுற்றிருந்த இராமலிங்கரின் மனம், நிலையான பொருளைத்தேடி இலயித்தது.  இந்த தேடுதல் அருட்பெருஞ்சோதியை காணும் வரை நீடித்தது. இந்த தேடுதல்தான் அவரை தனித்திருந்து, பசித்திருந்து, விழித்திருக்க வைத்தது.

கந்தக்கோட்டம்
பள்ளிசெல்லும் வயதில் சென்னை கந்தக்கோட்டதிலேயே அதிகமாய் பொழுதைக் கழித்தார்.  உலகியல் எண்ணமின்றி இறைவனையே எண்ணி உருகினார்.  ஓடி ஆடி மகிழும் நேரத்தில் தனிமையைத்தேடி ஆழ்ந்து சிந்திப்பதற்கு கோயிலை தேர்ந்தேடுத்தார்.  மற்ற பிள்ளைகளின் இயல்பிலிருந்து இராமலிங்கர் வேறுபட்டு நின்றார்.  அவர் மனம் ஆன்மிக உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தது.

ஆனால் உலகியல் கண்ணோட்டத்தில் இருந்த அவரது அண்ணன் சபாபதி பிள்ளை, இவர் ஒழுங்காக படிக்கவில்லை என்று கண்டித்தார்.  தமது தம்பியை திருத்துவதாக எண்ணி "ஒழுங்காக பள்ளிக்கு சென்றால் மட்டும் சோறு போடு"  அதற்கிடையில் உணவளிக்காதே என தன் மனைவிக்கு கட்டளை பிறப்பித்தார்.  இராமலிங்கரும் எதைபற்றியும் கவலைபடாமல் கந்தக்கோட்டத்து முருகனை நினைந்து உருகிக்கொண்டிருந்தார்.   கந்தசுவாமி கோயில் என்ற சொல்வழக்கை "கந்தக்கோட்டம்" என மாற்றி வழங்கியவர்  நமது வள்ளலார்தன்.  "தேனில் ஊறும் பலாச்சுளை" போல் அவர் மனம் பக்தியில் ஊறி ஊறி மனிதத் தன்மையிலிருந்து அவரது உள்ளமும் உடலும் தெய்வத்தன்மைக்கு அவர் அறியாமலே சிறிது சிறிதாக மாறிக்கொண்டிருந்தது.

இதன் காரணமாக, பிற்காலத்தில்  இவர்முன் நின்று பேசுவோர் இவரது ஆத்ம சக்தியால் ஈர்க்கப்பட்டு பேச்சிழந்து நின்றனர்.  இவரது ஆன்ம சக்தியை உணர்ந்த சான்றோர் இவரிடத்தில் உரையாடும்பொழுது  நேர்கோட்டில் அல்லாமல் சற்று விலகி அமர்ந்து உரையாடுவார்களாம்.

Monday, 28 March 2016

Vallalar Varalaaru cont...(Chennai: 38, Veerasamypillai Street)சின்னம்மையாரின் தாய்வீட்டின் வறுமை காரணமாகவோ, அல்லது வளரும் பிள்ளைகளின் வாழ்க்கைக்குரிய வழியைத் தேடியோ, சின்னம்மையார் தம் ஐந்து பிள்ளைகளோடு சென்னையில் குடியேறினார்.

அன்னையை போன்றவளல்லவா நம் சென்னை.  வந்தோரை வாழவைக்கும் தமிழகம் என்ற சொற்றொடர் குறிப்பாக நம் சென்னைக்கு நன்கு பொருந்தும்.

19-ம் நூற்றாண்டு ஆன்மிகத்தின் பொற்காலம் என்றே சொல்லலாம்.  மகான்களின் பாதம் சென்னையில் பதிந்தது.  அவர்களுக்குள்ளிருந்த பக்திமொட்டு ஞான மலராய் மடலவிழ்ந்து மணம் பரப்பியது.  ராமகிருஷ்ண பரமஹம்சர், தியாகராஜஸ்வமிகள், பாம்பன் சுவாமிகள் இவர்களெல்லாம் அவதரித்தது இந்த நூற்றாண்டுதான்.

சென்னையில் தங்கியிருந்த இடம்.

சென்னை நகரில் குடியேறியபோதும் குடும்பநிர்வாகம் தாய் சின்னம்மையாரின் மேற்பார்வையில் இருந்தது.    வடசென்னையில் ஏழுகிணறு பகுதியில் வீரசாமிப்பிள்ளை தெரு 38-ம் எண்ணுள்ள வீட்டில் தங்கியிருந்தனர்.  இதே வீட்டின் இன்னொரு பகுதியில் இறுக்கம் இரத்தின முதலியாரும் தங்கியிருந்தார்.  இராமலிங்கரும்  இவரும் நட்புக்குரியவர்களாக  இருந்தார்கள்.

அண்ணனின் ஆதரவு :


இராமலிங்கரின் குடும்பம்  சைவசமயத்தை சார்ந்ததால் அண்ணன் சபாபதி பிள்ளை  சென்னையில் சமய சொற்பொழிவு மூலம் வருவாய் ஈட்ட தொடங்கினார்.  சிறுபிள்ளையாக இருந்த தம்பி இராமலிங்கரை தம் ஆதரவில், மனைவி பாப்பாத்தி அம்மாளின் துணையோடு வளர்த்து வந்தார். இராமலிங்கரின் தொடக்கக்கல்வி ஆசிரியராக இருந்து கற்பிக்க தொடங்கினார்.  இராமலிங்கரும் எண்ணையும் எழுத்தையும் விருப்பத்துடன் விரைந்து கற்றார்.

சபாபதி பிள்ளை,  அப்போது புரசைவாக்கத்திலிருந்த தாம்  கல்வி கற்ற, ஆசிரியர் காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் (1792-1871) ,தம் தம்பி இராமலிங்கமும் படிக்க வேண்டும் என்ற ஆசையில் அவரிடம் கல்வி கற்க ஏற்பாடு செய்தார்.  தான் சமய  சொற்பொழிவு ஆற்றி பொருள் ஈட்டுதல் போல இராமலிங்கரும் சொற்பொழிவு செய்யலாம் என எண்ணி, தன் தம்பியின் கல்வியில் அதிக கவனம் செலுத்தினார்.  19-ம் நூற்றாண்டில் சமய சொற்பொழிவு  செய்பவரே சமூகத்தில் எல்லோராலும் மிகவும் மதிக்கபடுபவராக திகழ்ந்துள்ளனர்.

Sunday, 27 March 2016

Vallalar Varalaru (Marudhur: Chidambaram: Childhood)வள்ளலாரின் குழந்தைப் பருவம்:


                                                            
சிதம்பரம் இராமலிங்கம் 19-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் வாழ்ந்தவர்.   இறைவனே சிவனடியார் வேடத்தில் வந்து குணவதியான சின்னம்மையாரை  வாழ்த்தி அருள்வாக்கு நல்க , 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் நாள் சுபானு வருடம்  மாலை 5-30 மணிக்கு மருதூர் என்னும் சிற்றூரில் ராமையா பிள்ளை- சின்னம்மையார் தம்பதிக்கு 5-வது மகவாக பிறந்தார் .
பிள்ளைக்கு இராமலிங்கம் என பெயரிட்டு அழைத்தனர்.  பிறந்த பிள்ளையை தில்லை சிதம்பரத்திற்கு பெற்றோர் எடுத்து சென்றனர்.  ஆலய மணி ஒலிக்க, தீட்சிதர் கற்பூர ஆராதனை காட்ட அம்பலத்தரசரையும், கற்பூர ஜோதியையும் ஒருங்கே இமைக்கொட்டாது  விழித்து பார்த்த குழந்தை ராமலிங்கம் 'கலகல' என நகைக்க,  தீட்சிதர் இக்குழந்தை அம்பலவாணரின் அருட்குழந்தை என வாழ்த்தி இல்லம் அனுப்பினார்.

                                                 
உலகிலேயே மிகச் சிறந்த ஆலய மணி சிதம்பர தலத்தில் விளங்கும் சிகண்டி பூர்ணம் என்ற ஆலய மணியாகும்.இந்த மணியிலிருந்து எழும் தெய்வீக ஒலி நம்மை ஆழ்நிலை தியானத்தில் ஆழ்த்திவிடும் தன்மை கொண்டது .தியானத்தில் முன்னேற்றம் அடைய விரும்புவோர் இந்த சிகண்டி பூரண மணி ஓசையை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருத்தல் நலம் .வள்ளல் பெருமானுக்கு அருள் வழங்கி அனுக்கிரகம் அளித்த இந்த மணிக்கு இணையான மணி உலகத்தில் வேறெங்கும் கிடையாது.

அனைவருக்கும் ரகசியமாக இருந்த சிதம்பர ரகசியத்தை  (இத்தலம் ஆகாயதலமாக விளங்குகிறது)  இறைவன் ஓராண்டு பருவத்திலேயே இராமலிங்கருக்கு வெளிப்படையாக காட்டியருளினார். இந்த அனுபவத்தையே தமது 49-வது அகவையில் வடலூரில் சத்திய ஞான சபையில் ஏழு திரை நீக்கி ஒளியாக காட்டியருளினார்.

அவரது சிறுபிள்ளை பருவம் முதலே உள்வளர்ஒளியால் அவருக்கு   தெய்வக்காட்சி அனுபவம்  உண்டாகிக்கொண்டிருந்தது.  இதனையே அவர் பல்வேறு பருவத்தில் இயற்றிய பாடல் வரிகள் வெளிப்படுத்துகின்றன.

                   "தாய்முதலோ  ரொடு சிறிய பருவமதில் தில்லை 
                     தலத்திடையே திரை தூக்கத் தரிசித்த போது
                    வேய்வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் 
                    வெளியாக காட்டிய என்மெய் உறவாம் பொருளே "
எனவும்,
                              " அருட்பெருஞ்சோதியை கண்டேனே
                                  ஆனந்தத் தெள்ளமுத துண்டேனே"
< எனவும் பாட்டுருவில் வெளிப்படுத்தியுள்ளார். இக்கருத்தால் தில்லை சிதம்பரத்திலே  அடிகள் இறையருட்காட்சியை  கண்டார் என அறியலாம்.

இராமலிங்கர்  50-ஆண்டுகள்  5-மாதம் வாழ்ந்தார் எனினும் தம் தந்தையுடன் ஐந்து மாதமே வாழ்ந்துள்ளார்.  தந்தை மகன் உறவு வெறும் 5-மாதங்கள் மட்டுமே.

கணவரின் மறைவுக்கு பிறகு சின்னம்மையார் தம் ஐந்து குழந்தைகளுடன் தாம் பிறந்த ஊரான சின்னகாவனத்திற்கு வந்து சுமார் ஒரு வருடம் தங்கி இருந்தார்.

Prayer Time (Vadalur Events; Poosam: Jothi Dharshan)                                                           
Click here to :Jyothi Darshan 2016


 சமரச சுத்த சன்மார்க்க அன்பர்கள் வருடந்தோறும் நான்கு விழாக்களை சிறப்புடன் கொண்டாடுகின்றனர்.   வள்ளலார் பிறந்த நாள்; கொடி நாள்; தருமசாலை திறப்பு நாள்; தைப்பூச விழா ஆகியனவற்றை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.   (மாத பூசம் நேரம் இரவு 7.45 -8.45 pm)இந்த வருடத்திற்கான மாதபூச மற்றும் திருநாள் குறிப்புகள்.

ஆங்கில தேதி   தமிழ் தேதி         கிழமை                   திருநாள்
03.10.2018              புரட்டாசி          புதன்                                மாதபூசம்
05.10.2019              புரட்டாசி         சனி                        அவதார தினம் 
21.10.2019              ஐப்பசி                     திங்கள்                          மாதபூசம்
24.10.2019              ஐப்பசி                   வியாழன்                  கொடி கட்டுதல்
18.11.2019               கார்த்திகை        திங்கள்                          மாதபூசம்
15.12.2019               கார்த்திகை         ஞாயிறு                       மாதபூசம்
11.01.2020                 மார்கழி                   சனி                            மாதபூசம் 
07.02.2020                தை                      வெள்ளி                         கொடியேற்றம் 
08.02.2020                   தை                        சனி                                 தை பூசம்             
(தைபூச ஜோதிதரிசனம் நேரம் 6 am; 10am; 1pm; 7pm; 10pm; 
                               மற்றும் அடுத்த நாள் காலை 5.30 am) 
10.02.2020                 தை                 திங்கள்                               திருஅறை தரிசனம் 
06.03.2020                  மாசி              வெள்ளி                           மாத பூசம் 
02-04-2020                 பங்குனி         வியாழன்                            மாதபூசம் 


வள்ளலார் மெய்ந்நெறிச் சபை  நிறுவனர் தா.ஜெகன்மோகன் அவர்கள் 

                                   
                                      வள்ளலார் மெய்ந்நெறி சபை , புது கும்மிடிப்பூண்டி 
                                மாத வழிபாட்டு நேரம் இரவு 7-30 முதல் நள்ளிரவு 1-30 வரை

(சித்திரை மற்றும் ஆடி மாத முழுநாள் சிறப்பு வழிபாடு காலை 9-00 முதல்    நள்ளிரவு 2-00 மணி வரை )

(வழிபாடு நள்ளிரவு நேரம் என்பதால் இங்கு வழிபாட்டு தேதி பௌர்ணமி திதி நள்ளிரவில் இருக்குமாறு குறிக்கப்பட்டுள்ளது. )


Click here to Explore The New World
Thursday, 24 March 2016

Welcome to Aruljyothi

Time in Chennai -             
This is a website for Tamil Devotional, especially for Vallalar...


Thiru  Ramalinga Swamigal was born on 5thOctober,1823 at Marudhur.  His parents were Ramaiah Pillai and Chinnammaiyar. Hisfather was worked as a VAO.  At his age of 5th month, his father died early of hisbirth.  So, his family shifted to Ponneri,Chinnakavam village, native place of his mother Chinnammaiyar.  For economical condition of his family, they shifted to Chennai, at his age of two. 

Ramalingar's elder brother sabapathypillai , is only the earning member of the family.  He is tried to educate Ramalingar in traditional education system.  Ramalingar didnot like to spend his time with other children of his age. 

He was totally different from other children, in view of thinking and some other attitude.  His thinking was totally towards God.  He could compose wonderful devotional songs of Murugar, at Kandhakottam, Chennai at his very early age.  

After his First Speech about "Saivam" (his family belongs to Saiva samayam) at "Somu Chettiar's house, his elder brother realized the greatness of Ramalingar and allowed him to live in his own style. However, Ramalingar had to get married.  But he did not lead an active marital life.

His spiritual life began at the age of twelve.  In the initial stages, he used to visit many temples and shrine, Kandhaswamy Thirukovil at sowcarpet,   Thyagarajar and Vadivudaiamman Thirukovil at Thiruvotriyur  for 23 years.

later on, his orientation shifted towards higher realms and his focus was the supreme power beyond all forms. 

In 1858,for loneliness, Ramalingar moved towards karunguzhi, a hamler near his birth place. He performed miracles including burning light with water, an everflowing spring by digging with his hand which is still there.  In 1865, he formed the "Sanmarga Sangh" to advocate his principles of One God, Comapassion upon beings, Jeevakarunya and non-eating of animals, birds etc. feeding of hungry people.  In 1867, Vallalar established Dharmasala at Vadalur wherein the hunger of poor people was satisfied.

As time went, Vallalar chose Mettukuppam, started residing there.  The house where he stayed was named by him rightfully as "Siddhi Valagam" which means "Place of Attainment". In 30th.January, 1874,He locked himself inside the room, and expressed his desire that no one should not open it.  Only if the Government authorities persist to open it, let them be convinced about his desire and the room is opened, it found vacant.  He created "Sathya Gnana Sabha"  to indicate his inner experience of his spritual life.

Vallalar was a critic, writer and publisher and also had a knowledge in occultism, astrology and medicine especially in the nutritional and medical values of herbs.

He had a Truth-knowledge, about transformation of Body and deathlessness life.  He was a musician too and composed many poems and his lyrics expressed and inspired the sublime divinity, particularly that of Truth-Consciousness, that is Satya Gnana.  Of his six volumes of "Thiruarutpa", the unparalled  spiritual inspiration in the form of poems.